குழந்தை வயிற்றுவலியால் அழுதால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா

குழந்தை வயிற்றுவலியால் அழுதால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா

குழந்தை வளர்ப்பில் முக்கியமானது குழந்தையை அழாமல் பார்த்துகொள்வதுதான்.ஏனெனில் குழந்தையின் அழுகைக்கு காரணம் இதுதான் என்று சட்டென்று உணரமுடியாது. ஆனால் பெரும் பாலும் குழந்தைக்கு வயிற்று வலி தான் உண்டாகும். இதற்கு காரணங்களை உணர்ந்தாலே போதுமானது. அப்படியான நேரத்தில் என்ன செய்யலாம். தெரிந்துகொள்வோம்.
​குழந்தையின் அழுகையை கவனியுங்கள்

குழந்தையின் அழுகையை வைத்து அதன் அறிகுறிகளை கண்டு வயிறுவலியை உணர்ந்து கொள்ள லாம். போதிய தாய்ப்பாலை குடிக்காமல் இருப்பது, அப்படியே குடிக்க வைத்தாலும் அதை கக்கி விடுவது, திடீரென்று வீறிட்டு அழுவது,உடலை முறுக்கி பிழிவது என்று குழந்தையின் ஒவ்வொரு அறிகுறிகளையும் கவனியுங்கள். மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கும் போது இவை உதவும்.

​​தாய்ப்பாலில் கவனமின்மை

பிறந்த குழந்தை ஐந்து மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும் போது வேறு எங்கும் வேடிக்கை பார்க் காமல் இருக்கும் பால் குடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும்.ஆனால் தாய்ப்பால் குடிப்பதில் கவ னம் செலுத்தாமல் முதுகை வளைத்துநெளித்தப்படி முறுக்கேற்றி அழுதுகொண்டே இருப்பதும் தாய்ப்பால் குடிக்காமல் இருப்பதும் குழந்தையின் வயிற்றுவலியில் ஒரு அறிகுறி என்று சொல்ல லாம்.

தாய்ப்பாலை குடிக்காமல் அழுதுகொண்டே இருக்க்கும் போது குழந்தையின் தொண்டை வறண்டு விடும். அதனால் குறிப்பிட்ட நேரம் வரையிலும் குழந்தை தாய்ப்பாலையும் குடிக்காமல் அழுகை யையும் நிறுத்தாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Share this:

Author: நிருபர் காவலன்