குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா photo

Spread the love

குப்பைகளை கொட்டவிடாது மூன்றாவது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட விடாது முஸ்லிம்கள் மூன்றாவது நாளாக இன்றும்

மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக வவுனியாவில் குப்பைகள் அகற்றப்படாது துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு குப்பைகளை

அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாட்டால் குப்பைமேட்டின் அருகே முஸ்லிம் மக்களை குடியமர்தப்பட்டன. அம் மக்களே குப்பை

மேட்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி போராடி வருகின்றனர்.

இப்போராட்டம் காரணமாக வவுனியா வைத்தியசாலை, சந்தை, நகரப்பகுதி , இறைச்சிக் கடைகள் என பரவலாக

குப்பைகள் அகற்றப்படாமையால் வவுனியாவில துர்நாற்றம் வீச ஆரம்பித்துனள்ளது.

நிருபர் – வெடியரசன்

குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள்
குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள்

Spread the love