குண்டுகளால் துளைக்கமுடியாத- தங்க கழிவறை,

வைர கற்கள் பதித்த தங்க கழிவறை

ஹாங்காங்கை சேர்ந்த ‘ஆரோன் ஷம்’ என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கி உள்ளது. முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ள இந்த கழிவறை கோப்பையில் மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்து 815 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி ‘புல்லட் புரூப்’ எனப்படும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கமுடியாத கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 லட்சத்து 88 ஆயிரத்து 677 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 9 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரம்) மதிப்பிலான இந்த கழிவறை கோப்பை தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் 2-வது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கழிவறை கோப்பையை விற்க மனமில்லை என்று கூறிய ‘ஆரோன் ஷம்’ நிறுவன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வைர கற்கள் பொதியப்பட்டுள்ள கழிவறை கோப்பை என்ற பிரிவின் கீழ் உலகின் ஆடம்பர கழிவறை கோப்பைக்கான கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *