கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா

கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கும் இப்படத்தில் சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சூர்யா பேசும்போது, ‘ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் நடித்திருக்கும் படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது. ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி, ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது. ‘நந்தா’ படத்தில் மட்டும் தான் என்னால் அப்படி நடிக்க முடிஞ்சது.

சூர்யா – ஜோதிகா – கார்த்தி

ஆனா கார்த்தி கிளிசரின் போடாமல் அத சாதாரணமாக செய்து விடுவார். கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையாக பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் இயக்கியது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் பார்த்தப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கு. படமும் அழகாக இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’ என்றார்.

Share this:

Author: நிருபர் காவலன்