கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது…!

அண்மையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் மிகவும் அச்சமடைந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்து, அவருடைய குடும்பத்தாருடன் கூட பேசமுடியாத நிலையில் இருக்கின்றார். அவ்வாறிருக்க அவர் வந்து வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றது. அவரால் எவ்வாறு வாக்குமூலம் அளிக்க முடியும்? என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் தவறான பாதையில் பயணிப்பதற்கு முற்படுமாக இருந்தால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரைப் போன்று நாடு சர்வதேசத்தின் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், தற்போதைய பொருளாதார நிலைவரத்தின் பிரகாரம் கடுமையான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Share this:

Author: நிருபர் வெடியன்