
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
சந்தேகநபர் 8 மாதங்களில் 21 ஓட்டோக்களை திருடியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 ஓட்டோக்களையும், ஓட்டோக்களின் மீதமுள்ள பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரிபத்கொடையில், குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது
- நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
- இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
- காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
- ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
- தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
- சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்
- அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
- பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்