ஏன் இறைவா பறித்தாய் …?
முரசுமோட்டை மண்ணே
முன் விழுந்த கண்ணே ..
விழியில் நீரும் வடிய – உளம்
விலகிறாயே ஓடிய..
அழுது மனம் கதற
ஆறடி புதைகிறாயே தனிய…
இது தான் விதியோ ..
இறைவன் சதியோ …?
பிறந்தவர் எல்லாம்
இறப்பது விதியோ …?
இறைவா உன் படைப்பில்
இது என்ன சரியோ ..?
எழுந்து நடந்த பேரழகை
ஏனிறைவா பூட்டி வைத்தாய் ..?
அழுது புலம்பி நாம் கதற
ஆண்டவனே ஏனோ வைத்தாய் ..?
உடனிருந்து சிரித்தாய்
உணவு தந்து மகிழ்ந்தாய் …
பேரழகே இன்றென்ன
பேச்சின்றி வீழ்ந்தாய் ..?
எழுந்திட மாட்டாயா ..
ஏன் அழுதோம் பார்க்காயா …
நாம் அழுதால் இனைந்தழுவாய்
நாம் அழுதோம் ஏன் உறைந்தாய் ..?
உயிரில் வலி தந்து
உறவே சென்றாயோ ..?
உன் நினைவை உளம் புதைத்து
உறவே மறைந்தாயே ..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -25/08/2019
முரசுமோட்டை , சோதரி சிவா அவர்களது மரண துயர் அறிந்த பொழுது …அவர் பாதம் இதனை சமர்ப்பிக்கிறேன் ..!