உடல் எடையை குறைக்கும் சாலட்

உடல் எடையை குறைக்கும் சாலட்

தேவையான பொருட்கள் :

ஆப்பிள், பேரீச்சை பழம், மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை – 2 கப்

பால் – 2 கப்
ஓட்ஸ் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தேன் – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி

சாலட்

செய்முறை :

பழங்களை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும்போது ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.

ஓட்ஸ் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.

இந்த ஓட்ஸ் கலவையில் பழங்கள், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதை கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

  • இதில் விரும்பிய பழங்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *