இப்போ புரிந்தாயா …?

இதனை SHARE பண்ணுங்க

இப்போ புரிந்தாயா …?

கல்லாகி மனதுடைத்து
கதை பேசி போனவளே
சொல்லால சுவர் கட்டி
சொல்லமால் போனவளே ….

அறுவடைக்கு வர முன்னே
அருவாளை கை பிடித்து
வேரோடு அறுத்தென்னை
வேலியில் எறிந்தவளே …

அழகு நிலை என்று
அன்றெண்ணி நடந்தவளே
அது கலைந்து இன்றொழுக
அழு தென்ன கண்டவளே …?

தொப்பை முன் வைத்து
தொங்கி தசை விழுபவளே
வீங்கிய உடல் தாங்கி
வீங்கி போறவளே

நான் சொன்ன காதலன்று
நக்கலாய் போனதுவோ ..?
இப்போ தப்பி விட்டேன்
இதயத்தில் மகிழ்ந்து விட்டேன்

உன்னை தழுவிடவே
உடலால முடியாது
அரை ஏக்கர் காணியில
அடி வீடு போதாது

உன் நக்கல் தப்பாச்சு
உயிர் பிரியும் முன் வம்பாச்சு
இப்படித்தான் வாழ்விருக்கு
இன்றுனக்கு புரிந்தாச்சு ..

கடவுள் பதி வைத்த
கால கணக்கினிலே
வாலிபம் கரையுமடி
வாழ்வு சொல்லுதடி

ஏவுகணை போல
எடுத்தெறிந்து சொல்லடிகள்
தாக்கி உனை யழிக்க
தாரகையே என் செய்வாய் …?

வெந்த விழி நீரில்
வெள்ளம் தரை கழுவ
களைத்து போனவளே
கால சூழல் இது தான் ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் -23-10-2020

Home » Welcome to samayaltamil » இப்போ புரிந்தாயா …?

இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply