இந்தியா-நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை

Spread the love

இந்தியா-நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை

நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை 2-வது

தடவையாக இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை – இந்தியா வெற்றிகரமாக நடத்தியது


கோப்பு படம்
விசாகப்பட்டினம்:

நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது. இந்த வாரம், ஆந்திர மாநிலம்

விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கே-4 நீர்மூழ்கி கப்பலில்

இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

நேற்று 2-வது நாளாக அங்கு இச்சோதனை நடைபெற்றது. இது, இந்திய கடற்படையின் வலிமையை பறைசாற்றும்

என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆயிரத்து 500 கி.மீ.வரை பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, ஒட்டுமொத்த

பாகிஸ்தானையும், சீனாவின் பல பகுதிகளையும் எட்டக்கூடியது.


Spread the love