ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

Spread the love

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சாரியா. இவர் தமிழில் ஜீவா-ஸ்ரேயா நடிப்பில்

வெளியான ரெளத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர், மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி

காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து

கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ஆச்சாரியா

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

முன்னதாக, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும், நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா

கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான், கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு

பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.


Spread the love